கைப்பந்து போட்டியில் மாணவிகள் வெற்றி
திருச்சியில் நடந்த கைப்பந்து போட்டியில் கோவில்பட்டி பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் திருச்சி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 2-வது மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி 14 வயதுக்குட்பட்டோர் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றது.
வெற்றி பெற்ற மாணவிகள் அணியினரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பீட்டர் டைட்டஸ், ரவி தாமஸ், மகேஸ்வரி ஆகியோரையும் பள்ளி செயலாளர் கோவிந்தராஜூலு, நிர்வாக அதிகாரி சுகந்தி நிதியாள், தலைமை ஆசிரியர் சண்முகராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story