கவர்னர் தமிழ்நாட்டை தானும் ஆள வேண்டும் என்று முயற்சி செய்கிறார்


கவர்னர் தமிழ்நாட்டை தானும் ஆள வேண்டும் என்று முயற்சி செய்கிறார்
x

கவர்னர் தமிழ்நாட்டை தானும் ஆள வேண்டும் என்று முயற்சி செய்கிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை

கவர்னர் தமிழ்நாட்டை தானும் ஆள வேண்டும் என்று முயற்சி செய்கிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

தமிழகத்தை வஞ்சிப்பது தான்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை என்னவென்றால் தமிழகத்தை வஞ்சிப்பது தான். குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

இதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டாகும்.

அதேபோல் திண்டிவனம் -திருவண்ணாமலை ரெயில் பாதை திட்டம், திருவண்ணாமலை -ஜோலார்பேட்டை ரெயில் பாதை திட்டம், திண்டிவனம் -நகரி ரெயில் பாதை திட்டம் ஆகிய 3 திட்டங்களுக்கும் பணம் ஒதுக்கீடு செய்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தொல்லியல் துறையிடம் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

தூய்மை பாரதம்

தூய்மை பாரதம் என்ற திட்டத்தை பா.ஜ.க. அரசு அறிவித்து ஒரு நாள் மட்டும் விளம்பரத்திற்காக மட்டுமே தூய்மை இந்தியா என்று திட்டத்திற்கு சுத்தம் செய்துவிட்டு மேலும் அந்தத் திட்டத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை.

இதன் மூலம் எந்த நகரம் தூய்மையானது?. ஒட்டுமொத்தமாக பா.ஜ.க. அரசு ஆன்மிகம் மற்றும் இந்து என்ற பெயரில் கட்சியை வளர்க்க முயற்சிகள் நடைபெற்றதே தவிர அதனால் எந்த நகருக்கும், மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் எந்த வளர்ச்சியும் இல்லை.

திராவிட இயக்கங்கள் ஆளும் பொழுது தான், அதுவும் தி.மு.க. ஆட்சி செய்யும் பொழுது தான் தமிழ்நாடும், திருவண்ணாமலையும் வளர்ச்சி பெற்று உள்ளது. தமிழக கவர்னருக்கும், தி.மு.க. அரசுக்கும் எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஆனால் கவர்னர் தமிழ்நாட்டை தானும் ஆள வேண்டும் என்று அவர் முயற்சி செய்கிறார்.

அறங்காவலர் குழு தேர்வு

பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டத்தினை இணைவேந்தர், துணைவேந்தர்கள் வழங்கலாம் என்று சட்டம் இருந்த நிலையில், தான் பட்டம் வழங்க வேண்டும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் காத்திருக்க வைப்பது அவரின் குணத்திற்கு இதுவே சான்றாகும்.

மக்களுக்கு தேவையான புரட்சிகளை செய்யும் திராவிட மாடல் ஆட்சியை கவர்னர் சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார். இது எக்காலத்திலும் எடுபடாது. கவர்னரை போன்ற பலரை தி.மு.க. பார்த்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து இன்னும் 5 முறை திராவிட அரசு தான் ஆளும். உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர் குழு தேர்வு செய்வதற்கு பலர் விண்ணப்பித்து உள்ளனர்.

தகுதியான நபர்களை தேர்வு செய்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story