தந்தை திட்டியதால் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை சாவு


தந்தை திட்டியதால் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை சாவு
x

நச்சலூர் அருகே தந்தை திட்டியதால் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

கரூர்

புதுமாப்பிள்ளை

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி கீழமேடு பகுதியை சேர்ந்தவர் சன்னாசி (வயது 50). விவசாயகூலி தொழிலாளி. இவரது மகன் சதீஷ்குமார் (27). கோழி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் தனக்கு சொந்தமான பூக்காட்டிற்கு சன்னாசி சென்று பூச்சி மருந்து அடித்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் மீண்டும் பூக்காட்டுக்கு பூச்சி மருந்து அடித்தார்.

சாவு

இதை அறிந்த சன்னாசி மகனை பூச்சி மருந்து அடித்த பூக்காட்டுக்கு மீண்டும் பூச்சி மருந்து அடிக்கலாமா? என கேட்டு திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் கடந்த 11-ந்தேதி மதியம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.இதைக்கண்ட அங்கிருந்த உறவினர்கள் சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சன்னாசி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story