காவலாளி அடித்துக்கொலை


காவலாளி அடித்துக்கொலை
x

நாங்குநேரி அருகே, காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவதூறாக பேசியதால் வெறிச்செயலில் ஈடுபட்ட சக காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே, காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவதூறாக பேசியதால் வெறிச்செயலில் ஈடுபட்ட சக காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

காவலாளி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தாழைக்குளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் பெரும்புடையார் (வயது 50). இவர் அங்குள்ள நாற்கரசாலை சுங்கச்சாவடி அருகில் செயல்படாத ஓட்டலில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இதன் அருகில் உள்ள தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த சாமி மகன் பெருமாள் (48) என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவில் பெரும்புடையார், பெருமாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் பெரும்புடையார் ஓட்டல் முன்பு படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அடித்துக்கொலை

நள்ளிரவில் அங்கு வந்த பெருமாள், தூங்கிக்கொண்டிருந்த பெரும்புடையாரை கம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பெருமாள் அங்கிருந்து தப்பி சென்றார்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஓட்டல் முன்பு பெரும்புடையார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பெரும்புடையார் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்த புகாரின்பேரில், மூன்றடைப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியிருந்த பெருமாளை போலீசார் கைது செய்தனர்.

கொலையான பெரும்புடையாருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

நாங்குநேரி அருகே காவலாளியை சக காவலாளிேய அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story