தூக்கில் பிணமாக தொங்கிய பால் வியாபாரி


தூக்கில் பிணமாக தொங்கிய பால் வியாபாரி
x

ஆம்பூர் அருகே பால் வியாபாரி தூக்கில் பிணமாக தொங்கினார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் டவுன், கஸ்பா பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 18), பால் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, திவாகர் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story