மதுபோதையில் பணியில் இருந்த சிறை ஏட்டு பணி இடைநீக்கம்


மதுபோதையில் பணியில் இருந்த சிறை ஏட்டு பணி இடைநீக்கம்
x

மதுபோதையில் பணியில் இருந்த சிறை ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் சிறையில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார். அப்போது 7-வது பிளாக்கில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை ஏட்டு தனசேகரன் (வயது 38) என்பவரை அழைத்து கைதிகளுக்கு சரியான உணவு வழங்கப்பட்டதா? என்பது குறித்து விவரம் கேட்டு உள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி மது அருந்தி உள்ளாரா? என்பது குறித்து சோதனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் மதுபோதையில் இருந்ததாக டாக்டர்கள் நேற்று சான்று அளித்தனர். இதையடுத்து பணியின் போது மதுபோதையில் இருந்த சிறை ஏட்டு தனசேகரனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து கூடுதல் சூப்பிரண்டு வினோத் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

1 More update

Next Story