5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்


5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
x

5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர்

ஆம்பூர், ஜூலை.23-

5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசுிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பால்வண்ணன் (வயது 56). இவர் அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மதிய உணவு இடைவேளைக்கு மாணவ மாணவியர் சென்றிருந்தனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு தலைமை ஆசிரியர் பால்வண்ணன் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினரான அதே பள்ளியில் படித்து வரும் மாணவி பார்த்துள்ளார்.

உடனே தலைமையாசிரியர் அந்த மாணவியிடம் இது பற்றி வெளியே யாரிடம் சொல்ல கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வீடு இருவரும் நடந்த சம்பவத்தை தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பால்வண்ணனை நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இதைத்தொடர்ந்து பால்வண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story