தூய்மை பணியில் ஈடுபட்ட பேரூராட்சி தலைவர்


தூய்மை பணியில் ஈடுபட்ட பேரூராட்சி தலைவர்
x

குத்தாலம் பகுதியில் தூய்மை பணியில் பேரூராட்சி தலைவர் :ஈடுபட்டார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஏராளமானோர் ஊர்வலமாக 1-வது வார்டிற்கு வந்தனர். அங்கு தூய்மை பணிகளை குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 1-வது வார்டுக்குட்பட்ட கீழ மாந்தோப்பு தெரு, மேல மாந்தோப்பு தெரு, சத்யா நகர், அம்பிகா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடந்தது. அப்போது பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சாலையோரம் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் பேரூராட்சி செயலர் ரஞ்சித் உள்ளிட்ட அலுவலர்களும் குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் 1-வது வார்டு கவுன்சிலர் சேகர், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் சம்பந்தமூர்த்தி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வலர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story