மாணவிகளை வரவேற்று பேசியபோது தலைமை ஆசிரியை மயங்கி விழுந்ததால் பரபரப்பு
மாணவிகளை வரவேற்று பேசியபோது தலைமை ஆசிரியை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
மாணவிகளை வரவேற்று பேசியபோது தலைமை ஆசிரியை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறைக்குப்பின் வகுப்புகள் தொடங்கியது. முதல் நாளில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியை பத்மஜா பள்ளி மாணவிகள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பத்மஜா மயங்கிக் கீழே விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஆசிரியைகள் உதவியுடன் மீட்கப்பட்டு கார் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story