முன்னாள் சிறப்பு டி ஜி பி மீதான விசாரணை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


முன்னாள் சிறப்பு டி ஜி பி மீதான விசாரணை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜர் ஆகாததால் வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 6-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story