சாலை, மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு


சாலை, மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை, மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலை பணிகளும், ஆற்றுப் பாலங்கள், ரெயில்வே பாலங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மைய அதிகாரி கோதண்டராமன் ஆய்வு செய்தார். வாணியம்பாடியில் இருந்து நிம்மியம்பட்டு - ஆலங்காயம் சாலை 3 கிலோமீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்துவதை பார்வஐயிட்டு சாலையின் தடிமன், அகலம் ஆகியவற்றை சோதனை செய்தார். பின்னர் தண்டுக்கானுர், மட்றப்பள்ளி, புதூர்நாடு சாலைகளில் சிறுபாலம் அகலப்படுத்தும் பணியையும், ஆவாரங்குப்பம்-நாராயணபுரம் ஆற்றின் குறுக்கே நடைபெறும் பாலப்பணிகளையும் ஆய்வு செய்து, அதன் உறுதி தன்மையை கருவி மூலம் சோதனை செய்தார்.

மேலும் ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பம் ரெயில்வே கேட்டிற்கு பதிலாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் கோட்ட பொறியாளர் முரளி, வேலூர் திட்டங்கள் கோட்டப் பொறியாளர் சுந்தர், நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப்பொறியாளர் தனசேகர், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி கோட்டப்பொறியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story