அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்


அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்
x

வத்திராயிருப்பு அருகே அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அனுமதி

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான பட்டுபூச்சி ஜெயந்தி நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மலைப்பகுதியில் உள்ள 15 வகையான பொருட்களை எடுத்து விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள மலைவாழ் மக்களுக்கு தற்போது வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்னம் பட்டை 2 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கெடுபிடி காட்டுவதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும் மலை வாழ் மக்கள் வசிக்கும் வீடுகள் சேதம் அடைந்து காணப்படுவதாகவும், ரேஷன் கடை இல்லாததால் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும் மலைவாழ் மக்கள் கூறினர்.

குடியேறும் ேபாராட்டம்

இவ்வாறு அனைத்து அடிப்படை வசதிகள் கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேறி கோவிலாறு அணைப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் தங்களது பிள்ளைகளுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story