நடப்பாண்டில் 600 இணைகளுக்கு திருமணங்கள் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு..!
நடப்பாண்டில் 600 இணைகளுக்கு திருமணங்கள் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை,
பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 இணைகளுக்கு நடப்பாண்டில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருமணம் நடந்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக 100 திருமணங்கள் நடத்தப்பட உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் சார்பில் நடத்தப்படும் இலவச திருமணங்களில் ஒரு இணை திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருமண இணைகளுக்கு திருமாங்கல்யம் 4 கிராம், மணமக்கள் ஆடை, மாலை, 20 நபர்களுக்கு உணவு, பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், கைக்கடிகாரங்கள், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story