மின் கசிவால் வீட்டில் தீப்பிடித்தது
பரமத்தி வேலூர் அருகே மின் கசிவால் வீட்டில் தீப்பிடித்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள வேலாக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 37). இவரது மகன் கவின் (28) ராணுவ வீரர். இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவரது வீட்டில் இருந்த அறையில் மின் கசிவின் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். அதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் வீட்டில் இருந்த 2 இருசக்கர வாகனங்கள், துணிமணிகள், மளிகை பொருட்கள் மற்றும் ஒரு சிலிண்டர் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாயின. தீ விபத்து சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.