தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்


தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
x

பள்ளிபாளையத்தில் தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் தியேட்டர் ரோட்டில் குடியிருப்பவர் கோபால் (வயது 35). தனியார் நூர்பாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை மகாலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதை பார்த்த மகாலட்சுமி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பூஜை அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கு விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story