பள்ளிபாளையம் அருகே சமையல் செய்யும் போது கியாஸ் கசிந்து வீடு தீப்பிடித்தது


பள்ளிபாளையம் அருகே சமையல் செய்யும் போது கியாஸ் கசிந்து வீடு தீப்பிடித்தது
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 7:45 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்


பள்ளிபாளையம் அருகே பாதரை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 50). மின்வாரியத்தில் லைன் மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி. இவர் நேற்று கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சிலிண்டரில் இருந்த டியூப் எதிர்பாராதவிதமாக கழண்டு விட்டதாக தெரிகிறது. இதனால் சிலிண்டரில் இருந்த கியாஸ் வீட்டில் பரவி பொருட்கள் மீது தீப்பிடித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடிதத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்தநிலையில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story