தீயில் எரிந்து வீடு நாசம்


தீயில் எரிந்து வீடு நாசம்
x

திருமருகல் அருகே தீயில் எரிந்து வீடு நாசமடைந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி மெயின்ரோடு பாப்பாகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்தானம்(வயது 50). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியில் சென்று இருந்தாா். அப்போது வீட்டில் திடீரென தீப்பற்றி பந்தல் போட பயன்படுத்தும் சீட்டுகள், மரக்கம்புகள் மற்றும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் நன்னிலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து விட்டது. இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story