ஊட்டச்சத்து விழிப்புணர்வு மனித சங்கிலி


ஊட்டச்சத்து விழிப்புணர்வு மனித சங்கிலி
x

கே.வி.குப்பத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பத்தில் ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மனித சங்கிலி விழிப்புணர்வு, கே.வி.குப்பம் காய்கறி சந்தையில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ர.மைதிலி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.ரமேஷ்குமார், த.கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது ரத்தசோகை தடுப்பு, தன்சுத்தம், சுகாதாரம், தாய்ப்பால் அவசியம் போன்றவை குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மேற்பார்வையாளர்கள் ராணி, மாதேஸ்வரி, கே.வி.குப்பம், அம்மணாங்குப்பம் பகுதிகளின் குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழந்தைகள் மையப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story