20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 8-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 8-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:46 PM GMT)

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 8-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

விழுப்புரம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரியக்கத்தின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் குமார், மாநில துணைத்தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் எடுத்துரைத்தார். இதில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதிக்க வேண்டும்.

உண்ணாவிரத போராட்டம்

அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை, உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி சென்னையில் கவனஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்துவது எனவும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மே 2-ந் தேதி சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும், இப்போராட்டங்களில் 5 ஆயிரம் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது, மே மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தமிழகத்தில்இருந்து 700 ஆசிரியர்கள் பங்கேற்பது, ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவைகளை முறைப்படி உடனடியாக நடத்த வேண்டும், நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டில் நடைபெறும் சார்க் நாடுகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்பது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story