மின்கசிவால் குடிசை எரிந்து நாசம்


மின்கசிவால் குடிசை எரிந்து நாசம்
x

மின்கசிவால் குடிசை எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

வடகாடு பிலாக்கல்லை பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story