நூலுக்கான இறக்குமதி வரியை நிறுத்தி வைக்க வேண்டும்
நூலுக்கு இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
சுல்தான்பேட்டை
நூலுக்கு இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜவுளித்தொழில்
கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை, வதம்பச்சேரி, பாப் பம்பட்டி, பட்டணம், அப்பநாயக்கன்பட்டி, சூலூர், கண்ணம் பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் ஒரு லட்சம் விசைத் தறிகள் இயங்கி வருகின்றன. இதில் காடாத்துணி உற்பத்தி செய் யப்படுகிறது.
இந்த நிலையில், நூல் விலை குறிப்பிட்ட சில வாரங்கள் வரை கூட நிலையாக இல்லாமல் அடிக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஜவுளித் தொழில்துறையினர் கடும் நெருக் கடியில் சிக்கி உள்ளனர்.
விலை உயர்வு
எனவே நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள், உற்பத்தி நிறுத்த போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் மனுக்களையும் அளித்தனர்.
ஆனாலும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பருத்தி நூலுடன் செயற்கை நூல்களை இணைத்து ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி மேற்கொண்டு வருகின்றனர்.
இறக்குமதி வரி
இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
நூல் விலை உயர்வில் இருந்து தப்பிக்கவும், தொழிலை காப் பாற்றும் வகையிலும், செயற்கை நூலை இணைத்து பயன்படுத்த தொடங்கி உள்ளோம். தினமும் 70 லட்சம் கிலோவுக்கும் அதிகமான நூல்கள் இறக்குமதி ஆகின்றன.
தொழில் நிலைமை சீராகும் வரை நூலுக்கான 10 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் நூல் தடையின்றி கிடைக்கவும், நஷ்டத்தில் இருந்து தொழிலை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.