கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல்


கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல்
x

கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கரூர்,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் ராயனூர் பகுதியில் உள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். காலையில் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து தற்போது அதிகாரிகள் சோதனை நடத்த மீண்டும் சென்றுள்ளனர். இந்த நிலையில் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையடுத்து துணை மேயரின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்களை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் அதிகாரிகளின் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story