விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு


விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
x

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

வெள்ளமடம் அருகே பரதர் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 54), தொழிலாளி. இவர், சம்பவத்தன்று மதியம் விசுவாசபுரம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர், பெட்ரோல் நிரப்பி விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீரமார்த்தாண்டன்புதூர் அருகே வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த மகாராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாராஜன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.


Next Story