இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு


இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
x

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

ராமநாதபுரம்


ராமநாதபுரம் கோட்டைமேடு கோழிக்கூட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜன் (வயது47). சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி சண்முகப்ரியா(40). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மனைவி சண்முகப்ரியாவை, மோகன்ராஜன் கழுத்தை கயிறால் இறுக்கியும் கத்தியால் அறுத்தும் கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து மோகன்ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணைக்கு அப்போதைய விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் பலமுறை கோர்ட்டில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் ஆஜராகவில்லையாம். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் தற்போது பரமக்குடியில் பணியாற்றி வருவதாகவும் விடுமுறையில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story