நுகர்பொருள் வாணிபக்கழகம் முன்பு நேர்காணலுக்கு வந்தவர்கள் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழகம் முன்பு பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து குருவிக்காரன் சாலையில் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மண்டலத்தில் 20 - க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு பருவகால பணியாளர்களை நியமிக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. 100 - க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து அனைவருக்கும் நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. தற்காலிக பருவகால உதவியாளர் பணியிடங்களுக்கு நேற்று காலை 10 மணி அளவில் நேர்காணல் நடந்தது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சான்றில்களுடன் கலந்துகொள்ள வேண்டும். மற்ற நாட்களில் அனுமதிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நேர்காணலுக்கான நாளில் 50 - க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்திற்கு வந்தனர். இந்த நிலையில், பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து குருவிக்காரன் சாலையில் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் காரணமாக மறியலை கைவிட்டு மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு வழங்கினர்.