பீரோவில் இருந்த நகை மாயம்


பீரோவில் இருந்த நகை மாயம்
x

விருதுநகரில் பீரோவில் இருந்த நகை மாயமானது.

விருதுநகர்


விருதுநகர் 116-வது காலனியில் தன் தந்தை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருபவர் காளீஸ்வரி (வயது 29). இவர் தன் கணவர் திருப்பதியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் 5¾ பவுன் தாலிச்சங்கிலி மற்றும் 2 மோதிரங்கனை சுத்தம் செய்துவிட்டு பீரோவில் சேலைகளுக்கு நடுவில் வைத்திருந்தார். இந்நிலையில் திரும்ப வந்து பார்த்த போது நகை, ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.500 ஆகியவற்றை காணவில்லை. இதுபற்றி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story