நீலகிரி கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த நீதிபதி


நீலகிரி கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த நீதிபதி
x
தினத்தந்தி 11 July 2023 7:30 PM GMT (Updated: 11 July 2023 7:30 PM GMT)

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நீலகிரி கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.

நீலகிரி

ஊட்டி

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நீலகிரி கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மத்திய சிறை

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய இடங்களில் கிளை சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் அதிகபட்சமாக தலா 40 கைதிகள் வரை அடைத்து வைக்கலாம். இதில் தற்போது 30 கைதிகள் வரை உள்ளனர்.

நீலகிரி சிறைகளில் இருப்பவர்கள் கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின்னர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படுவார்கள். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவார்கள். குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் பெண்களும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

இந்தநிலையில் நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான அப்துல் காதர், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

உணவு தரம்

குறிப்பாக தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிகிறதா?, உடல் அல்லது மனநல பிரச்சினைகள் உள்ளதா?, மேல்முறையீடு செய்ய வசதி வாய்ப்பு உள்ளதா?, ஜாமீனில் செல்ல கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா?, அதில் ஏதாவது சந்தேகங்கள் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதிகள் கேள்வி கேட்டனர். மேலும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.


Next Story