கோர்ட்டு அமைய உள்ள இடத்தை நீதிபதி ஆய்வு


கோர்ட்டு அமைய உள்ள இடத்தை நீதிபதி ஆய்வு
x

காரியாபட்டியில் நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டியில் நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் ஆய்வு செய்தார்.

நீதிமன்றம்

காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காரியாபட்டி, ஆவியூர், மல்லாங்கிணறு, முக்குளம், கட்டனூர், நரிக்குடி ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் ஒரு ஆண்டிற்கு 2,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

காரியாபட்டி தாலுகாவிற்குட்பட்ட குற்ற வழக்குகளுக்காக விருதுநகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான வழக்குகளுக்கு அருப்புக்கோட்டை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலையும் இருந்து வருகிறது. ஒவ்வொரு வழக்கிற்கும் வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் 50 கி.மீ தூரம் சென்று வர வேண்டியுள்ளது.

நீதிபதி ஆய்வு

இதனால் பொது மக்கள் மிகுந்த அலைச்சலுக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் காரியாபட்டியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் காரியாபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் தாசில்தார் தனக்குமார், பேரூராட்சி சேர்மன் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன், காரியாபட்டி வழக்கறிஞர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

1 More update

Next Story