கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பியது


கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பியது
x

பலத்த மழையால் கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பியது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பச்சமலை பகுதி, அதனை தொடர்ந்து வழிநெடுக உள்ள சிற்றோடைகள் இணைந்தும், பேரளி மற்றும் மூங்கில்பாடி ஓடைகளிலும் வந்த மழை நீரும், ஆலத்தூர் வட்டாரப் பகுதியான சிறுகன்பூர், தெற்கு மாதவி, கொட்டரை, சாத்தனூர், ஆதனூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் பெய்த மழையாலும் மருதை ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கொட்டரை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீர் வழிந்தோடுகிறது. முன்னதாக இந்த நீர்த்தேக்கம் கடந்த நவம்பர் மாதம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் நீர்த்தேக்கம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இற்கிடையே கொட்டரை நீர்த்தேக்கம் கட்டும் பணி தொடங்கி 6 ஆண்டுகளாகி தற்போது தான் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் வலது, இடதுபுறத்தில் பாசன வாய்க்கால்கள் அமைக்கும் பணிகள் முடிவடையாததால் நீரத்தேக்கம் நிரம்பியும் தண்ணீர் விவசாயத்துக்கு பயன்பாடில்லாமல் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொட்டரை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன வாய்க்கால்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story