சலவை கூடம் நவீன வசதிகளுடன் புதுப்பித்து தரப்படும்:ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ உறுதி


சலவை கூடம் நவீன வசதிகளுடன் புதுப்பித்து தரப்படும்:ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ உறுதி
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:46 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் சலவை கூடம் நவீன வசதிகளுடன் புதுப்பித்து தரப்படும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ உறுதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணிஆற்றங்கரையில் பராங்குசநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் சலவை கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என சலவை தொழிலாளரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் சலவை தொழிலாளர்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் சலவை கூடத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் செயல்பட்டு வந்த சலவை கூடத்தை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், நவீன வசதியுடன் சலவைகூடத்தை புதுப்பித்து தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

இதற்காக சலவைத் தொழிலாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், அண்ரோ, நேதாஜி இளைஞர் படை தலைவர் ராமசாமி, தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story