2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேரன்மாதேவி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 28). அடி-தடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சேரன்மகாதேவி போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் நேற்று இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழங்கினார்.
சீவலப்பேரி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகத்துரை (22). அடிதடி, திருட்டு மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இவரை சீவலப்பேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் நேற்று இன்ஸ்பெக்டர் பெருமாள் வழங்கினார்.