கன்று குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தை
மேட்டுப்பாளையம் அருகே கன்று குட்டியை சிறுத்தை அடித்துக்கொன்றது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வனச்சரகம், கண்டியூர் காப்புக்காடு வன எல்லையையொட்டி நடேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு நடேசன் ஒரு மரத்தில் கன்று குட்டியை கட்டி வைத்துவிட்டு தோட்ட வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு கன்று குட்டியை பார்த்தபோது, அப்போது ரத்த வெள்ளத்தில், பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தையின் கால்தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கன்றுகுட்டியை சிறுத்தை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறி அந்த பகுதியில் கேமரா பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.