61 பேருக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து


61 பேருக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து
x
தினத்தந்தி 3 July 2023 1:33 PM GMT (Updated: 4 July 2023 8:43 AM GMT)

குடியாத்தம் அருகே 61 பேருக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது. இதனால் மீண்டும் பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

வேலூர்

குடியாத்தம் ஒன்றியம் பங்கரிஷி குப்பம் புதுமனை மற்றும் பழைய மனைப்பகுதியை சேர்ந்த ஆதி திராவிட மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக அதே கிராமத்தில் 61 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் அதில் இதுநாள் வரை வீடு கட்டாததால் அந்த வீட்டுமனை பட்டாக்களை வருவாய்த்துறையினர் ரத்து செய்து, தற்போது அந்த இடத்தில் வேறு நபர்களுக்கு பட்டா வழங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு மீண்டும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும், வேறு பகுதியிலாவது பட்டா வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் தலித்குமார் தலைமையில் குடியாத்தம் தாசில்தார் விஜயகுமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் இது குறித்து விசாரணை நடத்தி மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.


Next Story