மதுபாட்டிலுக்குள் குட்டித் தவளை - மது பிரியர்கள் அதிர்ச்சி...!


மதுபாட்டிலுக்குள் குட்டித் தவளை - மது பிரியர்கள் அதிர்ச்சி...!
x

மதுபான பாட்டிலுக்குள் குட்டித் தவளை மிதந்த சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி(வயது 51) கூலித்தொழிலாளியான இவர் இன்று நெல்லுார் அருகேயுள்ள சித்தரேவு அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு மதுபானம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.150 கொடுத்து குவாட்டர் அளவுள்ள மதுபான பாட்டிலை வாங்கியுள்ளார்.

அவர் வாங்கிய மதுபான பாட்டிலை உடைப்பதற்காக குலுக்கிய போது ஏதோ பாட்டிலின் உட்புறம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார். அதன்பின்பு மதுபான பாட்டிலின் உள்ளே உன்னிப்பாக கவனித்து, பார்த்த போது பாட்டிலின் உட்புறம் இறந்த நிலையில் குட்டித் தவளை ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது.

இதுகுறித்து, சித்தரேவு டாஸ்மார்க் கடையின் விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். அவர் முறையான பதில் அளிக்காமல் வேறு பாட்டில் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவருடைய பதிலில் திருப்தியடையாத பாண்டி அதனை அவரிடம் கொடுக்காமல் வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துள்ளார்.

மதுபான பாட்டிலுக்குள் குட்டித் தவளை மிதந்த சம்பவம் மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story