சாக்கடைக்குள் மூழ்கிய சிறுமி


சாக்கடைக்குள் மூழ்கிய சிறுமி
x
தினத்தந்தி 4 May 2023 7:00 PM GMT (Updated: 4 May 2023 7:01 PM GMT)

தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்து சாக்கடைக்குள் மூழ்கிய சிறுமியை உயிருடன் மீட்டனர்.

தேனி

தேனியில் ராஜவாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோய் பல ஆண்டுகளாக கிடக்கின்றன. கடந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த பணிகள் முழுமை பெறவில்லை. இந்த வாய்க்கால் தூர்வாருவதற்காக கடந்த ஆண்டு பங்களாமேடு பகுதியில் வாய்க்கால் தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது. தூர்வாரும் பணி முழுமை பெறாத நிலையில் இடிக்கப்பட்ட தடுப்புச் சுவரும் கட்டப்படவில்லை. இந்நிலையில் பங்களாமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து என்பவரின் 4 வயது மகள் கீர்த்தனா அப்பகுதியில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமி வாய்க்காலுக்குள் தவறி விழுந்தாள். அங்கு 6 அடிக்கு மேல் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளதால் சக்கடைக்குள் சிறுமி மூழ்கினாள். அதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டனர். அவரை சிகிச்சைக்காக தேனியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறுமி காயமின்றி உயிர் தப்பினாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story