சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்


சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்
x

சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் பேசியதாவது:-

விவசாயிகள் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது அத்திட்டங்களில் வேளாண் பட்டதாரிகளின் சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு வேளாண் பட்டதாரிகளின் சேவைகளை அரசு பயன்படுத்தியிருந்தால் அது குறித்த விபரங்களை வெளியிட வேண்டும்.

வேளாண் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய அல்லது அனுமதித்த நிதி எவ்வளவு என்பதையும் தொிவிக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளின் வசதிக்காக மேற்கொண்ட திட்டங்களை வெளியிட வேண்டும். வேளாண் பட்டதாரிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திரசிங்தோமர் பதில் அளித்து கூறியதாவது:- வேளாண் பட்டதாரிகளுக்கு மாணவர்கள், கிராமப்புற தொழில் முனைவோர் விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டு யோஜனா திட்டத்தின் கீழ் 6 மாத காலம் கிராமப்புற விழிப்புணர்வு பணி அனுபவம் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் மூலம் வேளாண் தொடர்பான கள அனுபவத்தை பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு கடந்த 2021-22-ம் ஆண்டில் ரூ.1.01 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் வேளாண் கல்வி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

விவசாய துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை அடிப்படையாக கொண்டு சிறு மற்றும் குறு விவசாயிகள் நலன்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story