ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது


ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது
x

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

திருச்சி

கல்லக்குடி:

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, உத்தரன்குடி ஊராட்சி சங்கரன்பாண்டல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். டிரைவரான இவர், திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூர் பகுதியில் இருந்து ஒரு லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிச்சென்றார். புள்ளம்பாடியில் இருந்து தஞ்சாவூர் பகுதி செல்லும் சாலையில் பாலம் கட்டப்படுவதால் புள்ளம்பாடி, கல்லக்குடி, கீழப்பழுவூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்காக நேற்று அதிகாலை அவர் லாரியை ஓட்டி வந்தார். கல்லக்குடியை அடுத்த வடுகர்பேட்டை கிராமம் அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்விளக்கு கம்பம் மற்றும் தடுப்புச்சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் மின்விளக்கு கம்பமும் சாய்ந்தது. டிரைவர் சுரேஷ் பலத்த காயமடைந்தார். லாரி சேதமடைந்ததோடு, ஜல்லிக்கற்கள் சாலையில் கொட்டி சிதறி கிடந்தன. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story