திருமணத்திற்கு சென்ற புதுப்பெண் மாயம்


திருமணத்திற்கு சென்ற புதுப்பெண் மாயம்
x

ஓச்சேரியில் திருமணத்திற்கு சென்ற புதுப்பெண் மாயமானார்.

ராணிப்பேட்டை

வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் நேற்று முன்தினம் ஓச்சேரி பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு தன்னுடைய உறவினர் மகளுடன் சென்றுள்ளார். அப்போது டீ குடிக்க செல்வதாக திருமண மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற அந்த பெண் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இதுகுறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெண்ணுக்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story