மனைவியை தாக்கியவர் கைது
மனைவியை தாக்கியவரை போலீசார் ைகது செய்தனர்.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் புல்லக்கவுண்டன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் கனகஜோதி (வயது 27). இவரது கணவர் வீரபத்திரன் (32).இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் இருந்த கனகஜோதியின் தந்தை கணேசனிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது அவரை தடுக்க முயன்ற கனகஜோதியை வீரபத்திரன் ஆபாசமாக பேசி கம்பால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அருகில் இருந்த அவரது இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கனகஜோதி அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராகிம் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரனை கைது செய்தார்.
Related Tags :
Next Story