தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது
தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் பரசுராமன் (வயது 37). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது அண்ணன் சின்னதுரை என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பரசுராமன் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்னதுரை மகன் சசிக்குமார் (26) எனது இடத்தை எனக்கு கொடுக்காமல் நீங்கள் ஏன் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறீர்கள், நிலத்தை காலி செய்து விடுங்கள் எனக் கூறி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த பரசுராமன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர்.