ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர் கைது


ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர் கைது
x

சேரன்மாதேவியில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மைதீன் பிச்சை (வயது 56). இவர் பத்தமடை - கரிசூழ்ந்தமங்கலம் ரோட்டில் வேப்பமர பஸ்நிறுத்தம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு பத்தமடை சம்பந்தர் தெருவை சேர்ந்த கான்சா (31) என்பவர் அடிக்கடி கடனாக சாப்பிடுவது வழக்கமாம். இதனால் அவர்களிடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மைதீன் பிச்சை ஓட்டலுக்கு வந்த கான்சா கடனாக சாப்பாடு கேட்டுள்ளார். ஆனார் மைதீன் பிச்சை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கான்சா, மைதீன் பிச்சையை அவதூறாக பேசி தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கான்சாவை நேற்று கைது செய்தார்.


Next Story