லாரி டிரைவரை தாக்கியவர் கைது


லாரி டிரைவரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 12:30 AM IST (Updated: 19 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

லாரி டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பாலபத்திராபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பசும்பொன் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் காற்றாலைக்கு உதிரி பாகங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு நெல்லை கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் ஆற்று பாலம் அருகே நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வெங்கடாசலபுரம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த வடிவேல் (35) என்பவர் எதற்கு இங்கு லாரியை நிறுத்தி உள்ளாய்? என கேட்டு அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பசும்பொன், கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து நேற்று வடிவேலை கைது செய்தார்.

1 More update

Next Story