மருந்து கடைக்காரரை தாக்கியவர் கைது
பெரியகுளம் அருகே மருந்து கடைக்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி
தேனியை சேர்ந்தவர் முகமது கோயாசேட் (வயது 40). இவர் பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது கடை முன்பு நின்றபடி அழகர்சாமிபுரத்தை சேர்ந்த புகழேந்திரன் (23) என்பவர் தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார். இதனை முகமது கோயாசேட் தட்டிக்கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த புகழேந்திரன், முகமது கோயாசேட்டை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். இதுகுறித்து அவர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்திரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story