நர்சை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
விராலிமலையில் நர்சை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
விராலிமலை தேரடி தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி மல்லிகா (வயது 32). இவர் விராலிமலை காமராஜர் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மல்லிகா பணியில் இருந்தபோது அங்கு வந்த வானதிராயன்பட்டி அத்திப்பள்ளத்தை சேர்ந்த குமரவேல் (38) என்பவர் தனது மகளுக்கு காய்ச்சல், தலைவலி காரணமாக ஊசி போட்டதாகவும், அதன்பிறகு தனது மகளின் இடுப்பில் கட்டி ஏற்பட்டு உள்ளதாக கூறி தகாதவார்த்தைகளால் பேசி மல்லிகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த குமரவேல் தனது செருப்பால் மல்லிகாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.