முதியவரை தாக்கியவர் கைது


முதியவரை தாக்கியவர் கைது
x

முதியவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தங்க பெருமாள் (வயது 64). இவரது சகோதரருக்கும், அதே பகுதியை சேர்ந்த நம்பிராஜன் (37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனை மனதில் வைத்துக்கொண்டு தங்கபெருமாள் அவருடைய வீட்டிற்கு முன்பு இருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்தார். அப்போது அவர், தங்கபெருமாளை அவதூறாக பேசி, கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தங்கபெருமாள் பத்தமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து, நம்பிராஜனை கைது செய்தார்.


Next Story