ஆட்டோவில் சென்ற பெண்களை தாக்கியவர் கைது
ஆட்டோவில் சென்ற பெண்களை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
ஆட்டோவில் சென்ற பெண்களை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஆரணி கிளாஸ் கார தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஞானம்மாள் தனது மகள்கள் இந்துமதி, சரசு ஆகிேயாரை அழைத்துக் கொண்டு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஆட்டோவில் லாடவரம் கிராமத்திற்கு சென்றார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாதவன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஆட்டோவை வழிமறித்து ஆட்டோவில் இருந்த சரசு, இந்துமதி ஆகியோரை தாக்கினர்.
இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் சரசு புகார் செய்தார். ஆனால் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி போலீஸ் நிலையத்தை 20-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து சரசு, இந்துமதி தாக்கப்பட்டது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவனை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.