வீடு புகுந்து ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது


வீடு புகுந்து ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது
x

நெல்லை அருகே வீடு புகுந்து ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே பழைய பேட்டை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (42). பேட்டை செக்கடியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (41). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் 2 பேரும் நெல்லை டவுனில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இவர்களுக்கிடையே ஆட்டோ ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற பாண்டியராஜன், கண்ணனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பேட்டை போலீசில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிந்து பாண்டியராஜனை கைது செய்தார்.

1 More update

Next Story