கடைகளில் பூட்டை உடைத்து திருடியவர் கைது
கடைகளில் பூட்டை உடைத்து திருடியவர் கைது
திட்டச்சேரியில் உள்ள 6 கடைகளில் கடந்த 14-ந்தேதி நள்ளிரவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபரை கைது செய்யக்கோரி வியாபாரிகள் திட்டச்சேரி போலீசில் புகார் கொடு்த்தனர். அதன்ே்பரில் திட்டச்சேரி போலீசார் மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று திட்டச்சேரி கடைதெருவில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கும்பகோணம் செட்டிமண்டபம் மேலப்புளியம்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 38) என்பதும், அவர் துண்டம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி கொண்டு கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.