சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர் கைது


சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மறையூர் வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

மறையூர் வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனத்துறையினர் ரோந்து

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரக பகுதிகளில் தேக்கு, சந்தன மரம் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் பார்கவ தேஜா மேற்பார்வையில் வனச்சரகர்கள் புகழேந்தி, வெங்கடேஷ் ஆகியோரது தலைமையில் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறு வெடிகாரன்பாலி சரக பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது வெள்ளை நிற சாக்கு பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார். இதை தொடர்ந்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த நபரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சந்தன மரத்துண்டுகள் பறிமுதல்

விசாரணையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பதும், தற்போது விழுப்புரத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்த போது 7 சந்தன மரத்துண்டுகள், ரம்பம், வெட்டுக்கத்தி, கோடாரி, தீப்பெட்டி போன்றவை இருப்பதும், திருப்பூர் மாவட்டம் மறையூர் வனப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி, துண்டு, துண்டுகளாக சாக்குப்பையில் போட்டு தலையில் வைத்துக் கொண்டு பொள்ளாச்சியை நோக்கி கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையில் அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் ஓய்வு எடுக்கும் போது, ராஜீவ்காந்தி பீடியை புகைத்து விட்டு அணைக்காமல் விட்டதால் காய்ந்த புற்களில் தீப்பிடித்து உள்ளது. இதை தொடர்ந்து ராஜீவ்காந்தி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15.280 கிலோ சந்தன மரத்துண்டுகள் மற்றும் ரம்பம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story