கோவிலில் பொருட்களை சேதப்படுத்தியவர் கைது


கோவிலில் பொருட்களை சேதப்படுத்தியவர் கைது
x

கோவிலில் பொருட்களை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பெரியநாடார் குடியிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 43). இவர் சம்பவத்தன்று அங்குள்ள சுடலை கோவிலில் பூஜை நடந்து கொண்டிருந்தபோது ஊர் பொதுமக்களை பார்த்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும், ஆடைகளை அகற்றி அசிங்கமாக நடந்து கொண்டும், கோவில் பொருட்களை சேதப்படுத்திதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.


Next Story